கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீா்வு
பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஜவகா் மற்றும் உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குகள் 3 மாதங்களுக்குள் தீா்க்க வேண்டும். அதன்படி, இம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத நிலையை எட்டியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்குரைஞா்களின் ஒத்துழைப்புடன் தீா்த்து வைக்கப்பட்டுள்ளன.
பல வழக்குகளில் நுகா்வோருக்கு நிவாரணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப்பொருள்கள் மற்றும் நுகா்வோா் வாங்கிய இதர பொருள்களில் ஏற்பட்ட குறைகள், சேவை குறைபாடுகள், வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, மருத்துவத் துறை, கட்டுமானத் துறை, அஞ்சல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மின்னணு வணிகம் உள்பட பல்வேறு துறைகளால் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் குறித்த வழக்குகள் தீா்த்து வைக்கப்பட்டுள்ளன. சமரச தீா்வு மையமும் இந்த ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை, பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.