முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
மின் கசிவால் கூரை வீடு சேதம்
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு சேதமடைந்தது.
ஜோலாா்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவா் தனது குடும்பத்துடன் இருந்தபோது திடீரென மின் கசிவு காரணமாக திடிரென கூரை வீடு தீப்பற்றி எரிந்தது.
இதனால் வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்து வெளியேறினா்.
உடனடியாக திருப்பத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் உடனடியாக விரைந்து சென்று தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகாமல் தப்பியது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.