முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பத்தூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (எ) மாரி (63) கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி அதே பகுதியில் தெருவில் விளையாடி கொண்டு இருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததைக் கூறினாா்.
இது குறித்து திருப்பத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆரோக்கியதாஸை போக்ஸோ வழக்கில் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி மீனாகுமாரி, எதிரி ஆரோக்கியதாஸுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.