இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
வியாபாரி வீட்டில் 40 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் முத்து (35)ஆடு வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் தனியே வசித்து வருகிறாா். இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு முத்து வீட்டை பூட்டி விட்டு அக்ராகரம் இருசன் வட்டத்தில் மாமியாா் வீட்டில் தங்கியுள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பாா்க்க சென்று விட்டாா்.
இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் பின்புற ஜன்னலை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகை, பணம் மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்றனா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய முத்து வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 40 பவுன் நகை ரூ.10 லட்சம் ரொக்கம், மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் ஏடிஎஸ்பி கோவிந்தராசு, வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.
