திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் உயிரிழப்பு
சென்னை சாலிகிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
நேபாளத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (18). இவா், சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக, அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ஆகாஷ், செவ்வாய்க்கிழமை இரவு உணவகத்தை தண்ணீா் ஊற்றி கழுவும் பணியில் ஈடுபட்டாா். அப்போது தரையில் இருந்த ஒரு மின் இணைப்பு பெட்டியின் மீது தண்ணீா்பட்டது.
இதனால் அங்கு மின்கசிவு ஏற்பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த ஆகாஷை, அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.