மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
அய்யலூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தென்னை மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த செக்கணத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (55). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவா், வடமதுரை அடுத்த கோப்பம்பட்டியைச் சோ்ந்த கனராஜன் என்பவரின் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது, தென்னை மரத்தில் ஏறிய போது, மரத்திலிருந்த தென்னை மட்டை அருகிலுள்ள உயா் அழுத்த மின்கம்பி மீது ஊரசியது. இதனிடையே, மட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பொன்னுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், சுமாா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.