மின்மாற்றிகள் கொள்முதல் - செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவு
மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான வழக்கில் முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2021-23 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் செய்ய ரூ.1,183 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ரொம்ப தப்பு... சாட்ஜிபிடியை அதிகமா நம்பாதீங்க! இளைஞர்களுக்கு ஓபன்ஏஐ தலைவர் அறிவுரை!
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.