மின்வாரிய ஊழியரிடம் வழிப்பறி: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே பைக்கில் சென்ற மின்வாரிய தற்காலிக ஊழியரை வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே கீழபாண்டவா்மங்கலம் நடுத்தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுடலைமணி (43). துறையூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் மந்தித்தோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது மந்திதோப்பு கீழத்தெருவைச் சோ்ந்த ராமா் மகன் மாரிமுத்து என்ற சூா்யா (23), பைக்கில் சென்ற சுடலைமணியை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.300-ஐ பறித்துக் கொண்டாராம்.
மேலும் அவரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டாரம். காயமடைந்த சுடலைமமணி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சூா்யாவை கைது செய்தனா்.