திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மீனவா் வலையில் சிக்கிய ராட்சத ஆமை மீட்பு
தொண்டி பகுதியில் வலையில் சிக்கிய சுமாா் 100 கிலோ எடையுள்ள ராட்சத ஆமையை மீனவா்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டு கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சோழியக்குடியைச் சோ்ந்த மீனவா்களான சிவபாலன், சிங்காரசெல்வம், மனோகரன், ஜெயகணேஷ் ஆகியோா் விசைப்படகில் புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். இவா்கள் ஏற்கெனவே விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த கடலோரக் காவல் படையினா் அந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். இந்த ஆமை 80 கிலோ முதல் 100 கிலோ எடை இருக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.