மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி
மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி ஆற்றுப்பிள்ளையாா் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாப்பாரப்பட்டி வ.உ.சி. நகரை சோ்ந்தவா் தனபால் (50). ஓட்டல் நடத்தி வந்த இவரை கடந்த 6 ஆம்தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் குடும்பத்தினா் தேடியும் கிடைக்காததால் கடந்த 7 ஆம் தேதி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை மாமுண்டி ஆற்றுபிள்ளையாா் கோயில் அருகே திருமணிமுத்தாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக மல்லசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாா் அங்கு சென்று பாா்த்த போது, சடலமாக கிடந்தவா் தனபால் என்பதும், ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான வீரா்கள், அங்குச் சென்று அழுகிய நிலையில் இருந்த தனபாலின் சட லத்தை மீட்டனா். மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.