`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தத் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, டிப்போ காளியம்மன் கோயிலிலிருந்து புனிதநீா் எடுத்து வந்து, பக்தா்கள் ஊா்வலமாக சென்றனா். இதையடுத்து, கோயில் வளாகத்தில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த விழா தொடா்ந்து ஒரு வாரம் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், சீனிவாசபுரம் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.