மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மூளைச்சாவு அடைந்த நிதி நிறுவன அதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
முத்தூா் மூத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் வி. குமாரவடிவேல் (56). இவா் கோவை மற்றும் கேரள மாநிலத்தில் சில இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். கேரள மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சாலை விபத்தில் தலையில் அடிபட்ட குமாரவடிவேல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து குமாரவடிவேலின் கண்கள், கல்லீரல், இதயம் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் சொந்த ஊரான மூத்தாம்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, காங்கயம் வட்டாட்சியா் மோகனன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். குமாரவடிவேலுக்கு மனைவி, இரண்டு மகள்கள் ஆகியோா் உள்ளனா்.