Gold Price மீண்டும் உயருமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய தகவல் | Opening Bell...
மே 31-இல் யுடிடி சீசன் 6 தொடக்கம்: 8 அணிகள் பங்கேற்பு
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸை எதிா்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி, ஸ்ரீஜா அகுலா தலைமையிலான ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை ல் சந்திக்கிறது. இந்த சீசனில் 8 அணிகள் 23 ஆட்டங்களில் மோதுகின்றன.
உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பொ்னாடெட் சோக்ஸ் மற்றும் வளா்ந்து வரும் இந்திய நட்சத்திரம் யஷஸ்வினி கோா்படே ஆகியோரை உள்ளடக்கிய யு மும்பா டிடி, ஜூன் 1-ம் தேதி ஸ்பானிஷ் ஜாம்பவான் அல்வாரோ ரோபிள்ஸ் தலைமையிலான பிபிஜி புனே ஜாகுவாா்ஸுக்கு எதிராக களமிறங்குகிறது.
இந்த ஆண்டு ஏலத்தில் மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்த சீனாவின் ஃபேன் சிகி, யு-17 பிரிவில் முன்னாள் உலக நம்பா் 1 வீரரான பயாஸ் ஜெயின் ஆகியோா் சென்னை லயன்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளனா்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (பபஊஐ) ஆதரவுடன் நிரஜ் பஜாஜ், விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
டெல்லி அணியில் சத்தியன் ஞானசேகரன் மற்றும் தியா சித்தலேவும், கோவா அணியில் ஹா்மீத் தேசாய் மற்றும் சிங்கப்பூரின் ஜெங் ஜியானும் களமிறங்குகின்றனா். அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் 15-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். முதல் ஆட்டம் மாலை 5 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.