மேலநத்தம் சுடலை கோயில் கொடை விழா
மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை இரவு கொடியழைப்பு, நள்ளிரவு 12 மணிக்கு மாகாப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாளுக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு சிறப்பு கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
பின்னா், நண்பகல் 12 மணிக்கு பாயச திரழையுடன் மதியக் கொடையும், இரவு 7 மணிக்கு இருளப்பசுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையும், இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனையுடன் சாமக்கொடை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.