தெற்காசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட்..! புலம்பும் ரசிகர...
மேலாளரை அடித்தேனா? உன்னி முகுந்தன் விளக்கம்!
தாக்குதல் புகார் தொடர்பாக நடிகர் உன்னி முகுந்தன் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் உன்னி முகுந்தனிடம் மேலாளராகப் பணியாற்றிய விபின் குமார் நேற்று முன்தினம் (மே. 26) டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தைப் பாராட்டியதற்காக உன்னி முகுந்தன் தன்னைத் தாக்கியதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உன்னி முகுந்தன் தன் தரப்பிலிருந்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “விபின் குமார் 2018-ல் நான் எனது முதல் திரைப்படத்தைச் சொந்த தயாரிப்பில் தயாரிக்க இருந்தபோது என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தன்னை திரையுலகில் உள்ள பல பிரபலங்களின் பிஆர்ஓ (PRO) ஆக அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ஒருபோதும் எனது தனிப்பட்ட மேலாளராக நியமிக்கப்படவில்லை.
அண்மையில் வெளியான மார்கோ படப்பிடிப்பின்போது ஒப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியருடன் விபின் பெரும் மோதலில் ஈடுபட்டார். அவர்கள் இதை பொதுவெளியில் கொண்டு சென்றது படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. இந்தப் படத்தின் முழு பாராட்டையும் எனக்கு வழங்கவில்லை என்று விபின் என்னை கத்தினார். இது எனது நெறிமுறைகளுக்கு நியாயமற்றதாக இருந்தது.
மேலும், எனது பணி தொடர்பாக பல பிரச்னைகள் இவரால் ஏற்பட்டதாக எனது கவனத்திற்கு வந்தது. புதிய மற்றும் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து விபினின் தவறான பேச்சுகள் குறித்து பல புகார்கள் வந்தன. சக பணியாளராகவும் நண்பராகவும் மன்னிக்க முடியாத ஒரு செயலைச் செய்திருந்தார்.
நேரில் சந்தித்தபோது, அவர் எனது அனைத்து கவலைகளையும் புறக்கணித்தார். திரையுலகில் உள்ள எனது சில நண்பர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறியவர், தனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார். (அவர் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தப்பட்டது).
எனது அனைத்து டிஜிட்டல் தரவுகளுக்கும் அவருக்கு அணுகல் இருந்ததால், எழுத்துப்பூர்வ மன்னிப்பு அளிக்குமாறு கேட்டேன். ஆனால், அவர் அதை அனுப்பவில்லை; மாறாக, செய்தி தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் எனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் பரவுவதைக் கண்டேன்.
இதையும் படிக்க: டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!
விபின் கூறுவதுபோல் எந்த உடல் ரீதியான தாக்குதலும் நடக்கவில்லை. அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் உண்மையற்றவை. அந்த இடம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. தயவுசெய்து அதைச் சரிபார்த்து முடிவுக்கு வரவும்.
இந்த நபர், கடந்த நான் ஐந்து ஆண்டுகளாக மிகவும் பிஸியாக இருப்பதாக மக்களிடம் கூறி, எனது வேலை வாய்ப்புகளைக் குறைத்து வந்திருக்கிறார். அவர் என்னைப் பற்றி மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி வந்தார். ஒரு பெண் நடிகையை தொடர்பு கொண்டு என்னைத் திருமணம் செய்யுமாறு கேட்டு, இது எனக்கும் அவருக்கும் இடையே பெரும் மோதலுக்கு வழிவகுத்தது. அவர் தனது ஆதாரங்களைப் பயன்படுத்தி எனது புகழை சமூகத்தில் அவமதிப்பதாக வாய்மொழியாக மிரட்டினார். நான் எப்போதும் எனது சக ஊழியர்களுடன் தொழில்முறை உறவை பராமரித்து வந்தேன். ஆனால், இந்த நபர் மிகவும் விஷமமானவர்.
இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் பொய்யானவை. அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். நான் ஒரு எளிய இலக்கு. அவர் என்னை அச்சுறுத்தி, துன்புறுத்தி, தகாத பலன்களைப் பெற முயல்கிறார்.
எனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் மகிழ்ச்சியடையாத சிலர் இந்த நபருக்கு உதவி செய்து எனது வாழ்க்கையை அழிக்க முயல்கின்றனர் என நம்புகிறேன். நான் இந்த வாழ்க்கையைக் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் கட்டமைத்தவன். நான் உண்மையை நம்புகிறேன், இருப்பினும் நான் பலவிதமான பாதிப்புகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
உன்னி முகுந்தனின் இந்த விளக்கம் அவரின் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றதுடன் அவருக்கு ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: கறுப்பு வெள்ளை... ஜெயமாலினியை ஆட வைத்த 'மாயாஜால' விட்டலாச்சார்யா!