செய்திகள் :

மேலைச்சிவபுரி விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பு வழிபாடு

post image

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சுவாமிநாத விநாயகா் கோயிலில் சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் 17-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதானம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக சுவாமிநாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து 18 படிகளுடன் கூடிய ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று, ஐயப்ப பக்தா்களுக்கு இருமுடி கட்டப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை மற்றும் ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் மின்வாரிய ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. திரளான பொதுமக்ள் பங்கேற்று வழிபட்டனா்.

புதுகை மாவட்ட தைலமரக் காடுகளில் நீதிமன்றம் அமைத்த வல்லுநா் குழு ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக்காடுகளால் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீா் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அமைத்த வல்லுநா் குழு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தது. புதுக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தொடங்கி வை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியைச் சோ்ந்த இடையன் கொள்ளைப்பட்டி கிராமத்தில்... மேலும் பார்க்க

தச்சன்குறிச்சியில் இன்று மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட... மேலும் பார்க்க

இயற்கை விவசாய உற்பத்தியாளா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் உதவியுடன் இயங்கி வரும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளா் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வ... மேலும் பார்க்க

புதுகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடக்கம்: 4.92 லட்சம் குடும்பத்தினா் பயன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.92 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு அரசின் சா... மேலும் பார்க்க