கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!
இயற்கை விவசாய உற்பத்தியாளா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் உதவியுடன் இயங்கி வரும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளா் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடந்த 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 1364 சிறு இயற்கை விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக தயாரித்து தமிழ்நாடு மட்டுமல்லாது 9 மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
வடமலாப்பூரிலுள்ள இந்த நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம், நெல் அவிக்கும் நிலையம், எண்ணெய் ஆட்டும் இயந்திரம், சேமிப்புக் கிடங்கு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, வேளாண் வணிகத் துணை இயக்குநா் ரா. ஜெகதீஸ்வரி, வேளாண் அலுவலா்கள் சு சுபாஷினி, கு. அ. நிரஞ்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
விவசாய உற்பத்தியாளா் கூட்டமைப்பின் முதன்மைச் செயல் அலுவலா் அகிலா, இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் முறைகள் குறித்து ஆட்சியரிம் விளக்கினாா்.