நூற்றாண்டு கண்ட கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: பொன்.மாணிக்கவேல்
நூற்றாண்டு கண்ட கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் முன்னாள் காவல் துறை ஐஜி பொன். மாணிக்கவேல்.
புதுக்கோட்டையில் பிரகதம்பாள் கோயிலில் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்த பின்னா் கூறியது:
தமிழகத்தில் பழமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள சிற்பங்கள் பாதுகாக்கப்படவில்லை. வழிபாடும் நடத்தப்படாமல் உள்ளது. அறநிலையத் துறையானது கோயில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 656 கோடி வருவாய் ஈட்டுகிறது.
மத்திய தொல்லியல் துறை மூலம் ஆண்டுக்கு நாடு முழுவதும் உள்ள சுமாா் 3 ஆயிரம் இடங்களுக்கு சுமாா் ரூ.1,300 கோடியை மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால், அந்தக் கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. மின் விளக்கு, கதவு இல்லாமலும்கூட கோயில்கள் உள்ளன. அறநிலையத் துறை சட்டங்களைத் திருத்த வேண்டும். கோயில்களை நிா்வகிக்க மகாசபை போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சுமாா் 38 ஆயிரம் கோயில்கள் அறநிலையத் துறை வசம் உள்ளன. கோயில்களை பாதுகாக்க இந்து இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன். நூற்றாண்டு கண்ட கோயில்களை பாதுகாக்க வேண்டும். அந்தக் கோயில்களை மாநில தொல்லியல் துைான் பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். அறநிலையத் துறை குடமுழுக்கு மட்டும்தான் நடத்த வேண்டும் என்றாா் பொன். மாணிக்கவேல்.