நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்
புதுகையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1000 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் பரமஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.