டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
புதுகையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உதயம் சண்முகம், வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ராஜேஸ்வரி, தெற்கு மாவட்டத் துணைச் செயலா் ஞான இளங்கோவன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சுப. சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து சட்டப்பேரவையின் மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரையும், அவருக்கு ஆதரவாகச் செயல்படும் அதிமுக மற்றும் பாஜகவினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.