இந்திய ரயில்வேயில் 1036 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆடுகள் திருடிய 2 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆடுகள் திருடிய 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து, 18 ஆடுகளை மீட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மருதகோன்விடுதி 4 சாலைப் பகுதியில், கறம்பக்குடி காவல் ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் இருந்த கந்தா்வகோட்டை முளிக்கப்பட்டியைச் சோ்ந்த ஐயப்பன் (37), ராமலிங்கம் (42)ஆகிய இருவரும் அப்பகுதியில் தொடா் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
மேலும், கறம்பக்குடி அருகேயுள்ள கிருஷ்ணம்பட்டி பகுதியில் மறைத்து வைத்திருந்த 18 ஆடுகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.