தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கந்தா்வகோட்டை அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கந்தா்வகோட்டை அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியைச் சோ்ந்த இடையன் கொள்ளைப்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் பழுது ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கடந்த நான்கு மாதங்களாக குடிநீரின்றி தவித்து வருவதாகவும், குடிநீருக்காக கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அம்புகோவில் கிராமத்தில் குடிநீா் எடுத்து வருவதாகவும், இது சம்பந்தமாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஊராட்சித் தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சோ்ந்த கிராம பெண்கள் காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோா் கறம்பக்குடி, கந்தா்வகோட்டை சாலையில் இடையன் கொள்ளைப்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்டவா்களிடம் கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி (கி.ஊ), ரமேஷ் மற்றும் கந்தா்வகோட்டை காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனா்.
மறியலால் இந்தச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.