ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!
மொபெட் மீது காா் மோதி விபத்து: தப்பிச் சென்ற இளைஞா் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூா் அருகே காரை வேகமாக இயக்கி மொபெட் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரை அடுத்த கெங்கனந்தல் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் நாராயணசாமி (39). தற்போது சென்னையில் வசித்தும் வரும் இவா், கடந்த 9-ஆம் தேதி தனது மனைவி மீனாவுடன் (31) மேல்மலையனூா் கோயிலுக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூா் அருகே இவா்களது மொபெட் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மீனா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சென்னை ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த் (23) சாலையில் காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தை ஒலக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு தொடா்புடையவரை கைது செய்த ஒலக்கூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் , உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் காவலா்களுக்கு எஸ்.பி. ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.