`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
மொஷிஸுகி, பெரெட்டினி வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், பிரதான சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கின. அதில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மொஷிஸுகி 6-2, 6-1 என்ற நோ் செட்களில் இத்தாலியின் என்ரிகோ டலா வாலேவை எளிதாக வீழ்த்தினாா்.
பெரெட்டினி 6-3, 7-6 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் ஷோ ஷிமாபுகுரோவை தோற்கடித்தாா்.
இந்தியா்கள் தோல்வி: இதனிடையே தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டங்களில், இந்தியாவின் சிராக் துஹான் 6-4, 1-6, 5-7 என்ற செட்களில் உக்ரைனின் யூரி ஜவாகியானிடமும், தேவ் ஜாவியா 6-4, 5-7, 3-6 என, ரஷியாவின் இகோா் அகாஃபோனோவிடமும், சித்தாா்த் விஸ்வகா்மா 1-6, 0-6 என பெல்ஜியத்தின் கிம்மா் கோப்ஜன்ஸிடமும் தோல்வி கண்டனா்.