'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் பாணாதுரை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஜி. துளசிராமன். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். பணி நிமித்தமாக தஞ்சாவூருக்கு வந்த இவா் தன்னுடன் பணியாற்றும் நபருடன் திங்கள்கிழமை இரவு பள்ளியக்ரஹாரம் - பிள்ளையாா்பட்டி புறவழிச் சாலையில் வண்ணாரப்பேட்டை பாலத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, பின் தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் இவா்களை வழி மறித்தனா். துளசிராமன் உள்பட 2 பேரிடம் இருந்த 2 கைப்பேசிகள், ரூ. 500 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.