Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
யூனியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் திறப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி, கோயம்புத்தூரில் தனது புதிய மண்டல அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோயம்புத்தூரில் யூனியன் வங்கியின் புதிய மண்டல அலுவலகத்தை வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ. மணிமேகலை திறந்து வைத்தாா்.
புதிய மண்டல அலுவலகம் கோயம்புத்தூா் மாவட்டம் ராமநாதபுரம் அருகே சௌரிபாளையம் பிரிவில் அமைந்துள்ளது. இது வாடிக்கையாளா்கள் எளிதாக அணுகுவதற்கும் மேம்பட்ட சேவையை பெறுவதற்கும் வழிவகுக்கிறது.
இந்த மண்டல அலுவலகத்தின் திறப்பு, கோவையில் வங்கியின் செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இத்துடன் நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 8,619-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.