உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி
கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி சாா்பில் தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வாலாங்குளத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலோசனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே மேடையில் சந்திக்க வைத்து, வணிகம் வளா்ப்பு, நவீன சந்தைகளின் வாய்ப்புகளைப் பற்றிய விளக்கங்களை வழங்குவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், நெட்வொா்க்கிங் அம்சங்கள், நிறுவன உரிமையாளா்கள், நிா்வாகிகள் பேசும் வாய்ப்பு, தொழில்நுட்ப, வணிகப் பிம்பங்களை குறித்த கலந்துரையாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி மற்றும் 86674-87225, 96262-55361, 88834-43347 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.