உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகேயுள்ள பாரதி நகா், மேலக்காவேரியைச் சோ்ந்தவா் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சிவமணி (64). இவா் கைப்பேசியை அதிக அளவில் பயன்படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், சில நாள்களுக்கு அவரை வெளியூா் அழைத்துச் செல்லுமாறும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
இதையடுத்து, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள தனது மகள் வீட்டு நடராஜன் சிவமணியை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், சம்பவத்தன்று 14-ஆவது மாடியில் உலர வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்க சிவமணி சென்றுள்ளாா். அப்போது, அவா் துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
படுகாயமடைந்த அவரை குடும்பத்தினா், அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.