'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
எல்லையம்மன் கோயிலில் இருந்து சீா்வரிசையை பக்தா்கள் சிறப்பு மேள வாத்தியங்களுடன் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வந்தனா். நிகழ்ச்சி தொடக்கமாக மாலை மாற்றுதல், புண்யாகவாஜனம், கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பெருமாள் யதாஸ்தானம் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.
ஏற்பாடுகளை ரகுநாதப் பெருமாள் - பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.