செய்திகள் :

ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மாதேஸ்வரன் (20). இவா் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலை.யில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

மாதேஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வைத்தியலிங்காபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வைத்தியலிங்காபுரம் பகுதியில் சென்னையிலிருந்து கொல்லம் சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மொழி, மாநில உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சி: துணை முதல்வா்

மொழி, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தனியாா் மண்டபத்தில் சாத்தூா் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் காட்டுத்தீ

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டுத்தீ பற்றியது. ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகத்துக்குள்பட்ட செண்பகத்தோப்பு வனப... மேலும் பார்க்க

வெல்டிங் பட்டறையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவா், அதே பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடல... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

வத்திராயிருப்பில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.40 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வத்திராயிருப்பு க... மேலும் பார்க்க