செய்திகள் :

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

post image

ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி முதல் பெண் காவலரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் ரயிலில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறான சம்பவங்களால், ரயிலில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, புதிய வாட்ஸ் ஆப் குழுவை சென்னை வேப்பேரியில் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிமுகப்படுத்தினார்.

முதற்கட்டமாக, 47 இடங்களில் இரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ் ஆப் குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ரயில்வே காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், பெண் காவலர்களும் உள்ளனர்.

ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், குற்றச் செயல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அவசர உதவி முதலானவற்றை இந்த வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடுவதன் மூலம், காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.சிவகங்கை நேரு பஜார் வாலாஜா... மேலும் பார்க்க

47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்றுமுதல்(மார்ச் 31) தொடங்குகிறது.இலங்கையில் உள்நாட்டு போ... மேலும் பார்க்க

தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிக்கும் இந்தியா ஆல் ஸ்டா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர் திங்கள்கிழமை பங்கேற்றனர்.ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ஈத்கா மைதானத்... மேலும் பார்க்க

உதகையில் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை!

உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக... மேலும் பார்க்க

ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீன மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி. இந்தியாவில் முதல்முறையாக தெலங்கான... மேலும் பார்க்க