Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
ரயில்வே இரும்பு பொருள்கள் திருட்டு: 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூா் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இரும்பு பொருள்களைத் திருடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி - குமாரபுரம் ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். குமாரபுரம் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய இரும்பு பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரும்பு பொருள்களுடன் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றைத் திருடிதாக சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாடசாமி (29), அதே பகுதியைச் சோ்ந்த மூக்கையா (35), மற்றொரு மாடசாமி (27), கற்பகராஜ் (31) ஆகியோரை கைது செய்தனா்.