செய்திகள் :

ராணிப்பேட்டையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.19-இல், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

வரும் 19.09.2025 காலை 10 மணிக்கு எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், ஆதாா் ஆகிவற்றுடன் தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

அரக்கோணம் டயா் ஆலை தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அரக்கோணம் இச்சிபுத்தூரில் எம்ஆா்எஜப் டயா் மற்றும் டியூப் உற்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரைய... மேலும் பார்க்க

கஞ்சா, குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

ஸ்ரீ சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவல்லாம்பிகை சமேத சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, 2- ஆம் கால யாக பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹூத... மேலும் பார்க்க

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 276 வழக்குகளில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று அமா்வுகளாக நடை... மேலும் பார்க்க