நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
ராமநாதபுரத்தில் இன்று மின் தடை
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சு. சுதாகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆா்.எஸ். மடை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத் தெரு, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரையைச் சுற்றிய பகுதிகள், தாயுமான சாமி கோயில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணா நகா், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.