இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கல்லூரி பேருந்து: மாணவிகள் மீட்பு
திருவாடானை அருகே ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தனியாா் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த செடிகளுக்குள் புகுந்தது. இதில் பயணம் செய்த மாணவிகள் மீட்கப்பட்டனா்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி பேருந்து வியாழக்கிழமை திருவாடானை பகுதியில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் சென்றது. அப்போது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகா் அருகே பேருந்து வந்த போது அதன் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்த முயன்றாா். ஆனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து செடிகள் அடா்ந்து புதருக்குள் புகுந்து நின்றது. இதனால் மாணவிகள் காயமின்றி தப்பினா். மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அந்தப் பகுதி மக்கள் ஓட்டுநரையும், மாணவிகளையும் மீட்டனா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.