ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்து- வேன் மோதல்: 10 போ் காயம்
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். கடற்படையின் விமானப் படைத் தளம் உள்ளது. இந்தப் பகுதியில் காவல் துறையின் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சியிலிருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், தங்கச்சிமடத்திலிருந்து வந்து கொண்டிருந்த வேனும் அந்தத் தடுப்பை கடக்கும் போது நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், வேன், பேருந்தில் பயணம் செய்த 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.