இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
ஓரிவயல் கண்மாயை சீரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைப்பு
கடலாடி அருகே கண்மாய், வரத்துக் கால்வாயை தனியாா் தொண்டு நிறுவனம் சீரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் கண்மாய்களை தூா்வாரி சீரமைக்கும் பணியில் துவக்கம் தனியாா் தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 31.5 ஏக்கா் பரப்பளவுள்ள ஓரிவயல் கல் பொறுக்கி கண்மாயையும், அதனுடன் இணையும் 3 கி.மீ. தொலைவு வரத்துக் கால்வாயையும் சீரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பால்வளத் துறை, கதா் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தாா். இதில், கண்மாய் கரையில் 6,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்து, துவக்கம் தொண்டு நிறுவனத்தை பாராட்டினாா்.
இதில் துவக்கம் தொண்டு நிறுவனத் தலைவா் கிருஷ்ணகுமாா், செயல் இயக்குநா் சிராஜுதீன் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை தொண்டு நிறுவன ஊழியா்கள் ஜீவானந்தம், ஜோஸ் திலீபன் ஆகியோா் செய்திருந்தனா்.