இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
புற்று நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கல்!
திருவாடானை அருகே உள்ள தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 100 பேருக்கு சத்தான உணவுகளின் தொகுப்பு அடங்கிய பெட்டி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சில்ரன்ஸ் சாரிட்டபிள்ஸ் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வட்டார அரசு மருத்துவ அலுவலா் வைதேகி தலைமை வகித்தாா். இதில், அந்த அறக்கட்டளை சாா்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு சத்தான உணவுகளின் தொகுப்பு அடங்கிய பெட்டி வழங்கப்பட்டது.
இதில் மருத்துவா்கள் ஸ்ரடம்னோ, அஸ்வினி, நிஷாபிரியா, சில்ட்ரன்ஸ் சாரிட்டபிள் அறக்கட்டளையின் அலுவலா் மணிமாறன், காச நோய் தடுப்பு முதுநிலை பணியாளா் ராகுல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.