Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
ராமநாதபுரத்தில் பலத்த மழை
ராமநாதபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
மன்னாா் வளைகுடா, இதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ராமநாதபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே மேகமூட்டத்துடன் காணப்பட்டன. பிறகு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்தும் மேலாக நீடித்த இந்த மழையால் ராமநாதபுரம் பேருந்து நிலையம், கேணிக்கரை, வண்டிக்காரத் தெரு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பட்டினம்காத்தான் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும் கழிவுநீா் கால்வாய் தூா் வரப்படாததால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. எனவே, வரும் காலங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதால் கால்வாய்கள், நீா் வழித்தடங்களை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்காதவாறு இருபுறமும் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும் எனவும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.