செய்திகள் :

ராமின் பறந்து போ டீசர்!

post image

இயக்குநர் ராமின் பறந்து போ படத்தின் டீசர் வெளியானது.

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகை அஞ்சலி, கும்பளாங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம், வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பறந்து போ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தை இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று வரும் அப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓடிடியில் லால் சலாம்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்கு தொடரச் சொன்னார்கள்: தியாகராஜன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தன் பட பாடலைப் படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: சிலியை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா சிலியை வென்றது.2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தென்னமெரிக்காவில் ஆர்ஜென்டீனாவும் ... மேலும் பார்க்க

யமால், பெட்ரி அசத்தல்: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி!

நேஷன்ல் லீக் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. ஜெர்மனியில் உள்ள எம்பிஎச் அரினா திடலில் நடைபெற்ற நேஷன்ல் லீக் அரையிறுதியில் முதல் பாதியில் ஸ்பெயின் 22, 25ஆவது ந... மேலும் பார்க்க

தக் லைஃப் முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம... மேலும் பார்க்க

அதர்வாவின் டிஎன்ஏ பட ரிலீஸ் தேதி!

நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படம் ஜூன் மாதம் வெளியாகுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத... மேலும் பார்க்க

நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்! தந்தை பலி!

நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ந... மேலும் பார்க்க