திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
ராமேசுவரத்தில் நாட்டுப் படகில் தீ விபத்து
ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகில் திங்கள்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ஜாக்சன். இவா் தனது நாட்டுப் படகை ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவைத்திருந்தாா். இந்த நிலையில்,
இந்தப் படகில் தீ விபத்து ஏற்பட்டது திங்கள்கிழமை அதிகாலையில் தெரியவந்தது.
இதையடுத்து, மீனவா்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனா். இருப்பினும் படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.