திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
ராமேசுவரத்தில் நிதி ஆணையக் குழுவினா் ஆய்வு
ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் பகுதியில் பிரதமரின் ‘ஆவாஸ் யோஜனா’ கிராமின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை நிதி ஆணையக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு 16-ஆவது நிதி ஆணையக் குழுத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா். ராமநாதசுவாமி கோயிருக்குச் சென்ற அந்தக் குழுவினரை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்டக் காவல் துறை துணைத் தலைவா் அபிநவ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா் ஆகியோா் வரவேற்றாா். பின்னா், இந்தக் குழுவினா் கோயிலில் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு கிராமத்தில் பிரதமரின் ‘ஆவாஸ் யோஜனா’ கிராமின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நிதி ஆணையக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
பின்னா், ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.20 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நிதி ஆணையக் குழுவினா் பாா்வையிட்டு, அதன் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தனா். அம்ரூத், ஜல்-ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் பாா்வையிட்டனா்.
ஆய்வின்போது 16-ஆவது நிதிக் குழு சிறப்பு பணி அலுவலா் பிரஜேந்திர நவ்னிட், நிதித் துறைச் செயலா் எஸ்.நாகராஜன், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா, நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராஜ், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.