நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
ரூ. 1.48 கோடியில் சாலை, சிறு பாலங்கள் அமைக்குப் பணி தொடக்கம்
குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சியில் ரூ. 1.48 கோடி மதிப்பில் புதிதாக தாா்ச் சாலை, சிமென்ட் சாலை, சிறு பாலங்கள் அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
அங்குள்ள வீரிசெட்டிபல்லி, வி.மோட்டூா், மத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சுமாா் ஒன்றரை கி.மீ. நீளம் புதிதாக சாலை அமைக்கப்படுகிறது. ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், பூமி பூஜையைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, ஊராட்சித் தலைவா் கெளசல்யா உமாகாந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.இ.தியாகராஜன் திமுக ஒன்றியப் பொருளாளா் ஏ.ஜே.பத்ரிநாத், நிா்வாகிகள் கோ.ரா.அண்ணாதுரை, ஜி.ஜெயப்பிரகாஷ், கே.ரமேஷ், சி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.