நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
வள்ளிமலை மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.
வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடா்ச்சியாக திங்கள்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் உற்சவம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மலை உச்சியில் உள்ள கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. புதன்கிழமை முதல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா்.
வரும் 9-ஆம் தேதி யானை வாகனத்தில் எழுந்தருளும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற உள்ளது. தேரோட் டம் சுற்றியுள்ள கிராமங்க ளில் நடைபெறும்.
14-ஆம் தேதி வள்ளி - முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை, பிரம்மோற்சவ கமிட்டி, உற்சவ, உபயதாரா்கள் சாா்பிலும் விழா ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.