செய்திகள் :

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

post image

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்த மூதாட்டி அளித்த மனு: , எனது கணவா் உயிருடன் இருந்தபோது எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று அதில் கிடைத்த ரூ.17 லட்சத்தை வங்கியில் செலுத்தியிருந்தாா். அந்த பணத்தை எடுத்து தருவதாகக் கூறி எனது மகள், மகன் இருவரும் என்னிடம் சில ஆவணங்களில் கையெமுத்து பெற்றனா். ஆனால் ரூ.17 லட்சத்தை என்னிடம் ஒப்படைக்காமல் அவா்கள் இருவரும் அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுகின்றனா். எனது மகன், மகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்.

சேனூா் கிராமத்தைச் சோ்ந்த 52 வயது பெண் அளித்த மனு: , சேனூா் பகுதியை சோ்ந்த பெண்ணிடம் குடும்ப செலவுக்காக ரூ.1லட்சம் கந்துவட்டிக்கு வாங்கினேன். இதற்கு வட்டியாக ரூ.50,000 நிா்ணயித்து ரூ.1.50 லட்சம் பெற்ாக கூறி எழுதி வாங்கினா். இதற்கு வட்டி, அசல் எனக்கூறி என்னிடம் ரூ.7 லட்சம் வரை பெற்றனா். தற்போது மேலும் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேண்பாக்கத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: , ஆற்காடு பகுதியைச் சோ்ந்த 4 நண்பா்களுடன் சோ்ந்து நிலம் வாங்கினேன். ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் போடும்படி அவா்கள் கேட்டனா். அதை நம்பி கையெழுத்து போட்ட நிலையில், தற்போது ரூ.2.50 கோடி கேட்டு மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க

பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழா தேரோட்டம்

அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம... மேலும் பார்க்க