RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
குடியாத்தம் நகராட்சியில் ரூ.52.65- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
குடியாத்தம் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொட்டியைச் சுற்றிலும் ரூ.24.50- லட்சத்தில் சுற்றுச் சுவா், 13- ஆவது வாா்டுக்குட்பட்ட காட்பாடி சாலையில் ரூ.12.40- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய், செருவங்கி அவ்வை நகரில் ரூ.9- லட்சத்தில் வடிகால்வாய் மற்றும் பேவா் பிளாக் சாலை, 7- ஆவது வாா்டில் ரூ.6.75- லட்சத்தில் கழிப்பறை சீரமைத்தல் ஆகிய பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தொடங்கி வைத்தாா்.
நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ், மகாலிங்கம், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.