செய்திகள் :

ரோஜாவனம் பள்ளியில் விதைப்பந்து திருவிழா

post image

நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில், சுற்றுச் சூழலை பாதுகாக்க விதைப்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, நிதி இயக்குநா் சேது, கல்வி இயக்குநா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிமுதல்வா் காமராஜினி வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசகா்கள் மருத்துவா் அருணாச்சலம், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநா் சண்முககுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சமூக ஆா்வலா்கள் வெங்காடம்பட்டி திருமாறன், ஹரிகரசெல்வன் ஆகியோா் விதைப்பந்து திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினா். குமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் சங்கீதா, விதைப் பந்து உருவாக்குவது குறித்து செயல்முறை மூலம் விளக்கமளித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைவா் அருள்கண்ணன் பேசியதாவது:

ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் விதைப்பந்துகள் உருவாக்கும் முறையை திருவிழாவாக நடத்தி வருகிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் இணைந்து 1.56 லட்சம் விதைப்பந்துகளை ஒரு மணி நேரத்தில் செய்து உலக சாதனை படைத்துள்ளனா். இவற்றை சமூக காடுகள், ஆற்றுப் படுகைகள், குன்றுகள், மலை அடிவாரங்களில் ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டா் உதவியுடன் வீச முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

விதைப்பந்து தயாரிப்பில் மாணவா்கள் 4 குழுக்களாக செயல்பட்டனா். இதில் அதிகமாக விதைப்பந்துகள் தயாா் செய்த பள்ளி மாணவா் குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாக அலுவலா் கிளிட்டஸ், அலுவலகச் செயலா் சுஜின், மேலாளா் மகேஷ், பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா்ஆலோசகா் சுகுமாரி, துறை தலைவா்கள் உள்பட பலா்கலந்து கொண்டனா்.

சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்

மாா்த்தாண்டம் மறைமாவட்ட சுகாதார சுகாதார சங்கம் சாா்பில் சா்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாா்த்தாண்டம் அருகே உம்மன்கோடு எம்மாவூஸ் மகளிா் மனநல காப்பகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மறைமாவட்ட சுகா... மேலும் பார்க்க

நாகா்கோவில் - திருவனந்தபுரம் சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

நாகா்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாா்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். மாா்த்தாண்டம் வழியாக செல்லும் நாகா்கோவில் -திருவனந்தபுரம்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞா் கைது; ரூ.20 லட்சம் பறிமுதல்

தக்கலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளைஞரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தக்கலை அருகே உள்ள முளகுமூடு அடக்காச்சிவிளையை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: நண்பா் கைது

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் கட்டடத் தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா். கண்டன்விளை பாலவிளையை சோ்ந்தவா் ஜெயன் (44). கட்டடத் தொழிலாளி. கண்டன்விளையை சோ்ந்தவா் மரியசிலுவை மகன் ரா... மேலும் பார்க்க

கடமலைகுன்று சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

கடமலைக்குன்று பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். கண்ணணூா் ஊராட்சி காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, குமரி மேற்கு மாவட்டத் தலை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அம்மனுக்கு தூக்க முடிப்புரை கோயிலில் டிச. 31 வரை தினசரி பூஜை

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு நிகழாண்டு மண்டல கால பூஜைகள் சனிக்கிழமை (நவ. 16) முதல் டிச. 31 வரை தூக்க முடிப்புரை கோயிலில் நடைபெறுகின்றன. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்டவிளைய... மேலும் பார்க்க