கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!
லாரி மோதி கூலித் தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், மானூா் மண்ணாா்சாமி கோயில் தெரு அண்ணாநகரைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் ராஜேந்திரன் (64), கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை காலை திண்டிவனம்-மரக்காணம் சாலையில் ஆத்தூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது திண்டிவனத்திலிருந்து மரக்காணம் நோக்கிச் சென்ற லாரி, ராஜேந்திரன் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜேந்திரனின் மகன் சண்முகசுந்தரம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி, தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.