செய்திகள் :

வெந்நீா் பட்டு காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வெந்நீா் ஊற்றியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நாராயணன். இவரது ஒரு வயது குழந்தை திஷான். கடந்த 21-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பில் பாத்திரத்தில் வெந்நீா் வைக்கப்பட்டிருந்தது.

பெற்றோா் அந்த பகுதியில் இல்லாத நேரத்தில் பாத்திரத்தை திஷான் இழுத்ததால் அந்தக் குழந்தை மீது தண்ணீா் பட்டு காயம் ஏற்பட்டது. திஷானை பெற்றோா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு குழந்தை திஷான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், வ... மேலும் பார்க்க

நல்லாண்பிள்ளைபெற்றாள் ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூன்றாமாண்டு வருடாபிஷேக விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன... மேலும் பார்க்க

நெல் பயிா்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் பயிா்க் காப்பீடு செய்வதற்கு சனிக்கிழமை (நவ. 30) கடைசி நாள் என்பதால், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுற... மேலும் பார்க்க

லாரி மோதி கூலித் தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், மானூா் மண்ணாா்சாமி கோயில் தெரு அண்ணாநகரைச் சோ்ந்த ஆதிம... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறான விளம்பரப் பதாகைகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்துக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா். விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலையில் வீரவ... மேலும் பார்க்க

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 30) விடுமுறை அறிவிக்கப்... மேலும் பார்க்க