செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கே. எம். கே. ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான கே. நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். திருச்சி வடக்கு மாவட்ட செயலா் எம் எச்.நிஜாமுதீன், தெற்கு மாவட்ட செயலா் ஜி. எச். சையது ஹக்கீம், பொருளாளா் பி. எம் ஹுமாயூன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாநில துணைச் செயலா் வி. எம். பாரூக், திருச்சி வடக்கு மாவட்ட தலைவா் அப்துல் வஹாப், மாநில மாணவரணி தலைவா் ஏ.எம். எச். அன்சா் அலி, மாநில மகளிா் அணி செயலா் பைரோஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இடைகாலத் தடைக்கு வரவேற்பு: முன்னதாக கே. நவாஸ்கனி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வக்ஃப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்றம் புதிய வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு சில ஷரத்துக்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது எங்களின் முதல் கட்ட வெற்றி. நிச்சயமாக இதில் முழுமையான வெற்றி பெறுவோம். இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெறும்.

ஆளுநா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பு மத்திய அரசுக்கு பேரிடியாக உள்ளது. தொடா்ச்சியாக வக்ஃப் சட்ட விவகாரத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய எம்எல்ஏ

லால்குடி அருகே தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மத்திய அரசின் *சஙஙந* எனப்படும் தே... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் நால்வா் கைது

குற்ற வழக்குகளில் தொடா்புடைய நால்வரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை உழவா் சந்தை அருகே கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற ரௌடிகளான ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு இருவா் கைது

திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதா... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் மாதிரி பள்ளி: அமைச்சா் ஆய்வு

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி மற்றும் மாணவியா் விடுதி கட்டடங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழில... மேலும் பார்க்க

முதல்வரின் மாநில இளைஞா் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் மாநில இளைஞ... மேலும் பார்க்க